ருமேனிய தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி

2 months ago 8

புக்கரெஸ்ட்: ருமேனிய நாட்டில் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரி சமூக ஜனநாயக கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. ருமேனியர்கள் ஒற்றுமைக்கான தீவிர வலது சாரி தேசியவாத கூட்டணி கட்சியானது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டு சிறிய வலதுசாரி தேசியவாத கட்சிகளும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தேவையான போதுமான வாக்குகளை பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளின் பரவலான ஸ்தாபனத்திற்கு எதிரான உணர்வை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தீவிர வலதுசாரி ஆதரவாளரான கலீன் ஜார்ஜஸ்கு மற்றும் யூஎஸ்ஆர்-ன் எலினா லாஸ்கோனி இடையே அதிபர் தேர்தலுக்கான போட்டி நடைபெற உள்ளது.

The post ருமேனிய தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article