ரீ-ரிலீஸில் 1000 நாட்கள்.. சாதனை படைத்த சிம்புவின் 'விண்ணைத் தாண்டி வருவாயா'

3 months ago 16

சென்னை,

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது. 2010ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது. 

காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. முக்கியமாக, சென்னை பி.வி.ஆர் வி.ஆர் திரையில் ரீ-ரிலீஸில் இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் கொண்டாடுகிறது. இந்த வி.ஆர் திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா.

கதை ஒருபக்கம் இருந்தாலும் படத்தின் பாடல்கள் ஒரு வகையில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. இன்று வரை இளசுகளின் மனதில் நின்று ஒலிக்கக் கூடிய வகையில் பாடல்கள் அமைந்திருந்தன.

Read Entire Article