ரீ-ரிலீஸாகும் "சச்சின்" படத்தின் "குண்டு மாங்கா" பாடல் வெளியானது

1 day ago 3

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் 'சச்சின்' படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்மூடி திறக்கும்போது' பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியானது. இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து நடிகை ஜெனிலியா நெகிழ்ச்சி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின்' படம் ஏப்ரல் 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், "சச்சின்" படத்தின் "குண்டு மாங்கா" பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியாகியுள்ளது.

Gunda Manga Lyrical Video out now▶️ https://t.co/PYx9HEDsFA#Sachein Grand theatrical release on April 18thThalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP @geneliad #Vadivelu @iamsanthanam @bipsluvurself#ThotaTharani #VTVijayan #FEFSIVijayan #SacheinMovie @idiamondbabupic.twitter.com/ufb7qJMOZ6

— Kalaippuli S Thanu (@theVcreations) March 31, 2025
Read Entire Article