
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார் . இது லக்னோ அணிக்கு பின்னடைவாக உள்ளது .
இந்த நிலையில் பண்ட் மீண்டும் பார்முக்கு திரும்ப தோனியிடம் பேச வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நீங்கள் எதிர்மறையாகச் சிந்திக்கிறீர்கள் என்று உணர்ந்தால், விவாதிக்கக்கூடிய பல கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். தோனி அவருடைய முன்மாதிரி, அதனால் அவர் தோனியை அழைத்து பேச வேண்டும்.
தனது பழைய ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் எடுத்த காட்சிகளைப் ரிஷப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது அவருக்கு நம்பிக்கையைத் தரும். பல நேரங்களில், நாம் நமது வழக்கமான ஆட்டங்களை மறந்துவிடுகிறோம். என தெரிவித்துள்ளார்.