ரிஷப் பண்ட் அவுட்டாக கம்பீர்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

2 weeks ago 3

லீட்ஸ்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் (131 பந்து, 13 பவுண்டரி), ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆலி போப்பின் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா கைப்பற்றினார். தற்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொடுத்த தவறான மெசெஜ்தான் காரணம் என்று முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், " மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்டிற்கு வெளியிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டபோது, அது அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் பேட்டருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் காலப்போக்கில், சில வீரர்களுக்கு, நீங்கள் அந்த செய்தியை எவ்வாறு அனுப்புகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறும். சில வீரர்களுக்கு தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்" என்று கூறினார்.

தினேஷ் கார்த்திக் கூறுவது போல் இந்த ஆட்டத்தில் தனது பாணியில் ஆடி கொண்டிருந்த பண்ட், சும்பன் கில் மற்றும் கருண் நாயர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானமாக விளையாடுமாறு கம்பீர் ஓய்வறையில் இருந்து பண்டிற்கு மெசேஜ் ஒன்றினை மாற்றுவீரர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்த சில ஓவர்கள் ரிஷப் பண்ட் பந்தினை தடுத்து ஆட முயன்றார். இருப்பினும் அது அவருக்கு சரியாக வராததால் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாகவே தினேஷ் கார்த்திக், கம்பீரை குற்றம்சாட்டியுள்ளார். 

Read Entire Article