ரிஷப் பண்டின் சகோதரி திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய தோனி, ரெய்னா

5 hours ago 3

டெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சகோதரி சகியின் திருமண நிகழ்வு முசொவுரியில் நேற்று நடைபெற்றது. இதற்காக, தோனி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று டெஹ்ராடூன் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். நேற்று நடைபெற்ற திருமண சங்கீத் நிகழ்வில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒலிக்கப்பட்டது.

அப்போது தோனி, ரெய்னா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், மற்றொரு பாடலுக்கு தோனியும், சாக்ஷி தோனியும் உணர்ச்சி பொங்க பாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Read Entire Article