ரியோ ராஜ் நடித்த "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

4 months ago 13

சென்னை,

கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக வந்த ரியோ ராஜ், அதனைத்தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Get ready for the next tune to entice you into the world of #Sweetheart! Our second single drops this Monday, 24th #SweetheartFromMarch14 @thisisysr @rio_raj @gopikaramesh_ @SwineethSukumar #RenjiPanicker @KingsleyReddin @chaleswaran @ImFouzee @balaji_dop137 pic.twitter.com/MPivybzfYp

— YSR Films (@YSRfilms) February 22, 2025
Read Entire Article