ரியோ நடித்த "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

3 months ago 15

சென்னை,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார்.

கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பௌசி நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

"ஸ்வீட்ஹார்ட்" திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 11ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Read Entire Article