
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் 'ஹிட் 3'. பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.
தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். 'தி பாரடைஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சில காலமாகவே இப்படத்தின் கதாநாயகி குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அதன்படி, சமீபத்திய தகவலின்படி இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் மற்றொரு கதாநாயகியாக கயாடு லோஹரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் 2026 ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 'தி பாரடைஸ்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. தற்போது, 'தி பாரடைஸ்' தீம் பாடல் வெளியாகி உள்ளது.