
சென்னை,
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது வர்மா. இவர் கடைசியாக சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்த 'மசாகா' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தெலுங்கில் தனது முதல் வெப் தொடரில் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த தொடருக்கு தேவிகா மற்றும் டேனி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பி. கிஷோர் இயக்கும் இதில் சிவ கந்துகுரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சூர்யா வசிஷ்டா, சுப்பராஜு, மவுனிகா ரெட்டி, சோனியா சிங், சாகந்தி சுதாகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.