ரிக்கெல்டன் அவுட் சர்ச்சை... கிரிக்கெட் விதி சொல்வது என்ன..?

1 day ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வில் ஜேக்ஸ்க்கு வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் மும்பை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 7வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் ஜீசன் அன்சாரி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ரிக்கெல்டன் தூக்கி அடிக்க அதனை அற்புதமாக கேப்டன் கம்மின்ஸ் கேட்ச் பிடித்தார். இதையடுத்து களத்தில் இருந்து ரிக்கெல்டன் வெளியேறினார்.

ஆனால், ஐதராபாத் கீப்பர் கிளாசன் பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதற்கு முன்பாக ஸ்டம்புக்கு முன் கைகளைக் கொண்டு வந்ததால் அதை நடுவர் நோபால் என்று அறிவித்தார். இதையடுத்து ரிக்கெல்டன் தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்த அவுர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கிரிக்கெட் விதிப்படி  ஒரு பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் போது பந்து பேட்டில் பட்ட பிறகு வேண்டுமானால் பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பரின் கைகள் ஸ்டம்புக்கு முன்னால் வரலாம். ஒருவேளை பேட்ஸ்மேன் பந்தை மிஸ் செய்தால் அதை விக்கெட் கீப்பர் ஸ்டம்புக்கு பின்னால் இருந்தே பிடிக்க வேண்டுமே தவிர ஒருபோதும் கைகளை ஸ்டம்புக்கு முன்னால் கொண்டு வரக்கூடாது.

இதனை விக்கெட் கீப்பர் மீறும் பட்சத்தில் நடுவர் அதனை நோ பாலாக அறிவிப்பார். இந்த விதிப்படியே ரிக்கெல்டன் அவுட் ஆன பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article