டி20 கிரிக்கெட்: விராட் கோலியை முந்தி வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல்

4 hours ago 4

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளெஸ்சிஸ் - கே.எல். ராகுல் களமிறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆனால் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது வரை டெல்லி அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ரன்கள் அடித்துள்ளது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், அபிஷேக் போரல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல் 36 ரன்கள் அடித்திருந்தபோது டி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல். ராகுல் அடித்துள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள கே.எல். ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

Read Entire Article