ஒளிப்பதிவாளர் பிறந்தநாளை கொண்டாடிய "ஜெயிலர் 2" படக்குழு

4 hours ago 5

திருவனந்தபுரம்,

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', விஜய்யின் 'பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கினார். இப்படம் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், தற்போது தனது அடுத்த படமான 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.கோவை மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் நடந்து வந்த இப்படப்பிடிப்பு தற்போது கேரளாவின் கோழிக்கோட்டில் துவங்கி இருக்கிறது. படத்தில் தற்பொழுது நடிகர் பகத் பாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

இன்று பிறந்தாள் கொண்டாடும் விஜய்க்கு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் கார்த்திக் கண்ணன் இதற்கு முன் தாக் மகாராஜ், ஜெயிலர், டாக்டர், காத்து வாக்குல ரெண்டு காதல், ஆடை, சில்லு கருப்பட்டி போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Team #Jailer2 wishes the man behind the stunning visuals, DOP @KVijayKartik a very happy birthday! pic.twitter.com/5UiYFzPY1S

— Sun Pictures (@sunpictures) May 18, 2025
Read Entire Article