
சென்னை,
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவுடன் மீண்டும் இணைய விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டரான 'கீதா கோவிந்தம்' படத்தில் முதன்முதலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டு வெளியான 'டியர் காம்ரேட்' திரைப்படத்தில் இருவரும் நடித்தனர்.
அப்போதிலிருந்து இருவர் குறித்தும் இணையத்தில் வதந்தி பரவி வரும்நிலையில், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ராஷ்மிகாவுடன் மீண்டும் இணைய விரும்புவதாக விஜய் தேவரகொண்டா கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில், "நான் ராஷ்மிகாவுடன் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். நான் இன்னும் அதிகமாக அவருடன் படங்கள் நடிக்க விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகை' என்றார்.