பாண்ட்யாவை நம்பித்தான் சூர்யகுமார் அதனை செய்கிறார் - இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

1 day ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை 2-வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தி வருகிறது. ஏனெனில் இந்திய அணி அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் காயத்தால் சிரமத்தை சந்தித்த பாண்ட்யா தற்போது அதையும் தாண்டி பவுலிங் துறையில் அசத்துவதாக இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். அவரை நம்பியே சூர்யகுமார் தற்போது எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை பயன்படுத்தி வருவதாகவும் ஜாகீர் கான் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பாண்ட்யா பவுலிங் செய்வதற்கு வந்தால் அணியின் மொத்த சமநிலையும் மாறுகிறது. கடந்த காலங்களில் அவர் முக்கியமான பவுலராக செயல்பட்டார் அல்லவா? அதே சமயம் அவர் காயங்கள், இடுப்பு பிரச்சனை போன்றவற்றுடன் போராடியதால் பவுலிங் செய்ய முடியாதது போல் தோன்றியது. ஆனால் உறுதியாக நாம் அணிக்காக பவுலிங் செய்ய வேண்டும் என்பதை பாண்ட்யா புரிந்து கொண்டு முன்னேறி வந்தது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அவருடைய புள்ளிவிவரங்கள் அதற்கு ஆதரவு கொடுக்கிறது. ஹர்திக் பாண்ட்யாவும் தாம் பவுலிங் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார். அதை தற்போது தொடருக்காக அவர் தயாராவதிலிருந்து தெளிவாக பார்க்க முடிகிறது. அவர் அதை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பது நல்ல அறிகுறியாகும். அவர் தற்போது முழுமையாக பவுலிங் செய்வதால் இந்திய அணி 3 அல்லது 4 ஸ்பின்னர்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. அவர்கள் ஹர்திக் பாண்ட்யா இந்த வேலையை செய்வதற்கு முழுமையாக நம்புவதே இதற்கு காரணமாகும்" என்று கூறினார்.

Read Entire Article