சென்னை,
ராமாயணம்: தி லெஜண்ட் ஆப் பிரின்ஸ் ராமா என்பது 1993-ம் ஆண்டு ஜப்பான்-இந்தியா இணைந்து தயாரித்த அனிமேஷன் திரைப்படமாகும். இந்த படத்தை யுகோ சாகோ தயாரித்துள்ளார். இப்படத்தை கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு வனராஜ் பாட்டியா இசையமைத்துள்ளார்.இந்தியாவின் ஆதிகால பாரம்பரிய புராணத்தின் மறுவடிவம், வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 450-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இந்திய -ஜப்பானியக் கலைஞர்கள் இணைந்து, 100,000 கையால் வரையப்பட்டன.
கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் மூலம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 4கே தரத்தில் உருவாகியுள்ள இந்த அனிமேஷன் படம் வருகிற ஜனவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.