ரூ.99.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

5 hours ago 1

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட "இல்லம் தேடி கல்வி", "நம் பள்ளி நம் பெருமை", "எண்ணும் எழுத்தும்", "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்", திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களோடு, அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி, சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் மாபெரும் நூலகங்கள், மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை இவ்வரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டு காலங்களில், ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab), ரூ.455.32 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom), ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் ரூ.352.42 கோடி செலவில் 38 மாதிரிப் பள்ளிகள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,833.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுசுவர், என மொத்தம் ரூ.3160.49 கோடி செலவிலான பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களின் விவரங்கள்

அந்த வகையில், கடலூர் மாவட்டம் – தாண்டவராயன்பட்டி, பாலூர், இந்திரா நகர், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம், பழனி, லிங்கவாடி, ஈரோடு மாவட்டம் – பொலவக்காளிபாளையம், அந்தியூர், சிக்கரசம்பாளையம், பி.மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி மாவட்டம் – ஆரல்வாய்மொழி, அம்மன் திவளை, ஆனக்குழி, வரியூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – சிங்காரப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் – தோக்களக்குடி, அச்சல்புரம், வடகரை, கொடக்காரமூலை, குத்தாலம்;

நாகப்பட்டினம் மாவட்டம் – குருக்கத்தி, அம்பை, கோவில்குளம், ஆழியூர், வாழ்குடி, புதுக்கோட்டை மாவட்டம் – ஏம்பல், ஒத்தப்புளி குடியிருப்பு, பெருமாண்டு, கீரனூர், இராமநாதபுரம் மாவட்டம் – கோட்டைமேடு, இருமேனி, பேரையூர், ராணிப்பேட்டை மாவட்டம் – பனப்பாக்கம், ஜாகிர்தண்டலம், திருச்சிராப்பள்ளி

மாவட்டம் – தாத்தையங்கார்பேட்டை, நீலகிரி மாவட்டம் – கூடலூர், தேனி மாவட்டம் – அல்லிநகரம், சிலமலை, திருவண்ணாமலை மாவட்டம் – நெடுங்குணம், தாணிப்பாடி, நவபாளையம், தண்டராம்பட்டு, தெள்ளார், அண்டம்பள்ளம், வேட்டாவலம், ஆவூர், வந்தவாசி, திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு, தூத்துக்குடி மாவட்டம் – ஏரல், கயத்தாறு;

விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி, கொட்டப்பூண்டி, தேவனூர், விருதுநகர் மாவட்டம் – ராஜபாளையம், விருதுநகர், என்.சுப்பையாபுரம், எம்.புதுப்பட்டி, ஆமத்தூர், மல்லாங்கிணறு, புதுசூரங்குடி, காரியாப்பட்டி, கல்லாமனைச்சன்பட்டி, சேவல்பட்டி, விஜயகரிசல்குளம்,வெம்பங்கோட்டை, பூவநாதபுரம், திருத்தங்கல், அவியூர், மஸ்தகுறிச்சி, சாலைமறைகுளம்;

ஆகிய 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ. 99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மா.ஆர்த்தி,பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article