"ராமம் ராகவம்" புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

3 hours ago 1

சென்னை,

நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 'சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் "அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை" உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யா, பிரமோதினி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது. சமூகத்துக்குத் தேவையான கதையை கொண்ட படமாக இது உருவாகி இருக்கிறது. 

இப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பின்னர் பிப்ரவரி 28-ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 21-ந் தேதி வெளியாக உள்ளது.

రామం ప్రేమ కోసం ఒక వారం ముందుగానే వస్తున్న రాఘవం❤️✨️Emotionally stunning #RamamRaghavam is releasing worldwide on February 21st❤️#RRonFeb21st @thondankani @DhanrajOffl @suneeltollywood @Mokksha06 @pruvibes @DirPrabhakar @Ramjowrites @Arunchiluveru @sps_offpic.twitter.com/UrDPUI1hWU

— Dhanraj koranani (@DhanrajOffl) February 8, 2025
Read Entire Article