சாம்பியன்ஸ் டிராபி: அவரை ஏன் தேர்வு செய்தீர்கள்..? - இந்திய முன்னாள் வீரர் கேள்வி

2 hours ago 2

சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த அணியில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜாவை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், " இந்த அணியில் கொஞ்சம் சிக்கலான இடங்கள் உள்ளன. இதில் ரவீந்திர ஜடேஜா இருப்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அணியில் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பிளேயிங் லெவனில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. அப்படியானால், பிளேயிங் லெவனில் இடம்பெறாத ஒரு வீரரை ஏன் அணியில் சேர்க்க வேண்டும்? அது கொஞ்சம் சிக்கலான விஷயமாக இருக்கிறது" என்று கூறினார்.

Read Entire Article