
திண்டிவனம்,
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று நடைபெற்றது.இந்தக்கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார்.
பாமக செயற்குழுவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்புமணி ராமதாஸ்க்கு எதிராகவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில வருமாறு:
*2026ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய வகையில் கூட்டணி அமைக்க ராமதாஸ்க்கு அதிகாரம்'
*பாமக நிறுவனருக்கு களங்கத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ்க்கு முழு அதிகாரம்'
*தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை''
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல, அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டித்தக்கது. நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டித்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.