ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார் அன்புமணி

4 hours ago 3


திண்டிவனம்: ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் மே 25 வரை 8 நாட்கள் மகளிர் சங்கம், வன்னியர் சங்கம்,சமூக நீதிப் பேரவை என ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் ராமதாஸ். திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அன்புமணி அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் ‘சித்திரை முழு நிலவு’ மாநாடு கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியவற்றுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் காலை 10 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள், தேர்வுப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டு செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக பாமகவின் ‘சித்திரை முழு நிலவு’ மாநாட்டிலும் அன்புமணி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார் அன்புமணி appeared first on Dinakaran.

Read Entire Article