டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலுக்கு நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், அங்கீகாரம் இல்லாத கட்சிகளும் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு 6 மாதம் முன்பாக பொதுச்சின்னம் கோரலாம் என்ற விதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 2026 மே 10ம் தேதியுடன் முடிவதால் இவ்வாண்டு நவ.11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு பொதுச்சின்னம் கோரி மே 23 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The post தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.