ராமதாஸ் கூட்டிய செயற்குழுவை அங்கிகரிக்கக் கூடாது என அன்பு மணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு

8 hours ago 1

விழுப்புரம் : இரண்டு தினங்களுக்கு முன்பாக பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்த செயற்குழு கூட்டம் செல்லாது என ஏற்கனவே அன்பு மணி தரப்பில் நடைபெற்றிருக்க கூடிய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றபட்டிருந்தது. இந்த நிலையில் பாமக நிறுவன ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்த செயற்குழு கூட்டம் செல்லாது எனவும், அதில் நிறைவேற்றபட்டிருக்கக்கூடிய அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கிகரிக்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மின் அஞ்சல் மூலமாக அன்பு மணி தரப்பு அனுப்பப்பட்டிருந்தது .

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றிருக்கக்கூடிய செயற்குழு கூட்டம் செல்லாது எனவும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட நிலையால் இன்றிய தினமும் பாமக தரப்பில் அன்பு மணி வழக்கறிஞர் நேரடியாக டெல்லி சென்று முறையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகிருகிறது . பாமகவின்னுடைய அன்பு மணி தரப்பு சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பாலு தலைமையில் இன்றிய தினம் டெல்லி செல்ல இருப்பதாகவும் டெல்லி செல்ல கூடிய பாமக வழக்கறிஞர்கள் அன்பு மணிக்கு மட்டுமே செயற் குழு கூட்டம் ,பொது குழு கூட்டம் அழைப்பதற்கான அதிகாரம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்த செயற்குழு கூட்டம் 15 நாட்களுக்கு முன்னதாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நடைபெற்றது.

அதனால் அதை அங்கிகரிக்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தில் நேரடியாக புகார் அளிக்க இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தலைவர் பொதுசெயலாளர் பங்கேற்காத அந்த செயற் குழு கூட்டத்தை அங்கிகரிக்க கூடாது எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கபடுகிறது. அது மட்டும் இல்லாமல் செயற் குழு கூட்டத்தினை பொது குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு உண்டாண முலு அதிகாரமும் அன்பு மணி தரப்பிற்க்கு மட்டுமே இருகிறது.

அதுமட்டும் இல்லாமல் ராமதாஸ் ஏற்கனவே அன்பு மணி ராமதாஸ்யை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியிட்ட நிலையில் நிர்வாக குழு கூட்டத்தில் அன்பு மணிபெயரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .இந்த நிலையால் தான் இன்றிய தினம் தேர்தல் ஆணையத்தில் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணையதற்கு நேரடியாக சென்று புகாரளிக்க இருக்கிறார்கள் .

The post ராமதாஸ் கூட்டிய செயற்குழுவை அங்கிகரிக்கக் கூடாது என அன்பு மணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article