ராணுவம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

1 month ago 10

டார்ஜிலிங்,

நாடு முழுவதும் விஜய தசமி பண்டிகை இன்று கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மென்டில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் இணைந்து விஜய தசமியை கொண்டாடினார்.

இதன்பின் வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அவர் பேசும்போது, எந்த சூழலையும் எதிர்கொள்ள எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதுவே தற்போது தேவையான ஒன்றாக உள்ளது. நாம் தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும்.

வெறுப்புணர்வுடனோ அல்லது ஏளனத்துடனோ எந்தவொரு நாட்டின் மீதும் நாம் ஒருபோதும் போர் தொடுத்ததில்லை. இதுவே மரபுரிமையாக நாம் கொண்டிருக்கக்கூடிய இந்தியர்களின் மதிப்பாகும்.

ஆனால், நம்முடைய நலன்களுக்கு எந்தவித அச்சுறுத்தலாவது ஏற்பட்டால், எந்தவொரு பெரிய நடவடிக்கையையும் எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று நான் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இதுவே நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதியாகும் என்று கூறியுள்ளார்.

அண்டை நாடுகளிடம் இருந்து எந்தவித தீவிர தாக்குதலும் நடக்காது என்று நாம் புறந்தள்ளி விடமுடியாது என்று நடப்பு சூழலை குறிப்பிட்ட அவர், நாம் முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்று ஆயுத படைகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Read Entire Article