கிருஷ்ணகிரி, மே 10: கிருஷ்ணகிரி அருகே உண்டியல் பணத்தை எடுத்து இந்திய ராணுவத்திற்கு நிதியுதவி வழங்கிய சிறுவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமிபதி- பிரஷாந்தி தம்பதியினர். இவர்களுக்கு தேஜஸ்பதி(6), ஆதித்யாபதி(4) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டில் தின்பண்டம் வாங்க கொடுக்கும் சில்லரை காசுகளை உண்டியலில் சேர்த்து வைத்திருந்தனர். இந்நிலையில், ஜம்மு aகாஷ்மீர் மாநிலம் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ராணுவத்திற்கு உதவிடும் வகையில், தேஜஸ்பதி மற்றும் ஆதித்யாபதி ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கலெக்டர் சாக்லெட் வழங்கினார்.
The post ராணுவத்திற்கு நிதியுதவி வழங்கிய சிறுவர்கள் appeared first on Dinakaran.