ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

1 month ago 5

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சுஜாதா (50). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை சுஜாதா தனது மகன் வினித்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராணுவ அலுவலகத்திற்கு பென்ஷன் தொகை விஷயமாக சென்றுள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் மல்லிகா என்பவர் சுஜாதாவுக்கு போன் செய்து, உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சுஜாதா மாலை 3 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ லாக்கர் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து சுஜாதா மணவாள நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

The post ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article