
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில், கடை விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு தொழிலாளர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.