அடுத்த மாதம் 12-ந் தேதி மொரீஷியஸ் செல்கிறார் பிரதமர் மோடி

2 months ago 12

போர்ட் லூயிஸ்,

மொரீஷியஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12ம் தேதி தேசிய தினம் கொண்டாப்படுகின்றது. இந்நிலையில் அந்நாட்டின் 57-வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மொரீஷியஸ் தேசிய சட்டசபையில் பிரதமர் நவீன் ராம்கூலம் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நமது நாட்டின் 57வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பின்னணியில் எனது அழைப்பை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி தேசிய தின விழாவில் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை அவையில் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் வருகையானது நமது இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு ஒரு சான்றாகும்" என்று நவீன் ராம்கூலம் கூறினார்.

முன்னதாக கடந்த ஆண்டு தேசிய தின விழாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article