ராஞ்சியில் பிரதமர் மோடி வாகனப்பேரணி

6 months ago 19

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் அங்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 3 முறை வருகை தந்துள்ளார். இன்று மட்டும் இரண்டு இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராஞ்சியில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார் வழிநெடுக பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராஞ்சி, ஹடியா, கன்கோ, ஹிஜ்ரி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளில் இந்த ரோடு ஷோ நடைபெற்றது.

மொத்தம் 2 லட்சம் பாஜகவினர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியையொட்டி கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் சி.பி. சிங் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் உள்ளார். இவர் 6 முறை இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் ஆவார். முன்னாள் மந்திரியாகவும் அவர் இருந்துள்ளார்.

Read Entire Article