என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பம்

8 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜீனியரிங் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்தே பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.தற்போது, சுமார் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் படிப்புக்கான காலியிடங்கள் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்புக்கான மவுசு குறைந்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புதிய படிப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதால் மீண்டும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.இதன் காரணமாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

நடப்பாண்டிலும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு அடிப்படை தேவையான தொழில்நுட்ப படிப்புகள் என்ஜினீயரிங் சார்ந்தே இருப்பதால் அதிக மாணவர்கள் சேருவார்கள் என நம்பப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் நடப்பு ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்தநிலையில், என்ஜினீயரிங் படிப்பில் சேர 8 நாட்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிப்பதால், விண்ணப்பப் பதிவு 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப பதிவை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 9-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து ரேண்டம் எண் 11-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 10 முதல் 20-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Read Entire Article