ராஜபாளையம், ஜன.26: ராஜபாளையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பொன்னப்பன்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (25). ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர், வேலைநிமித்தமாக ராஜபாளையத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கொல்லகொண்டான் விலக்கு அருகே எதிரில் வந்த அரசு பேருந்து, டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்ந்து வந்த சேத்தூர் ஊரக காவல் சார்பு ஆய்வாளர் முருகராஜ், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
The post ராஜபாளையம் அருகே அரசு பேருந்தில் பைக் மோதல்: இளைஞர் பலி appeared first on Dinakaran.