ராஜபாளையம், ஜன.18: ராஜபாளையத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் 6 அடி நீள மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு புகுந்தது. 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருப்பதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் திடுக்கிட்டனர்.
உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு உஷாராக வீட்டை உட்புறமாக பூட்டிக் கொண்டனர். ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். நள்ளிரவில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிக்குள் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ராஜபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்தது 6 அடி மலைப்பாம்பு appeared first on Dinakaran.