ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் நாளை பேச்சு: டிரம்ப் அறிவிப்பு

3 hours ago 1

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நாளை பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும் ரஷ்யா – உக்ரைன் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து போது போர் நிறுத்தம் தொடர்பாக புதின் கூறும் போது சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல விஷயங்கள் நடந்து உள்ளதாக நிருபர்களிடம் பேசிய டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நாளை பேச உள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2ல் மேலும் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பது உறுதி என்றும், அன்றுதான் அமெரிக்கா சுதந்திரம் பெறும் நாள் என்றும் அவர் கூறினார்.

The post ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் நாளை பேச்சு: டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article