சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர சீரிய பணியாற்றிய உதவி ஆணையாளரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, தி.நகர் பகுதியில் வசித்து வரும் அல்லி, பெ/52, க/பெ.அய்யனார் என்பவர், கடந்த 01.05.2023 அன்று மதியம் தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் நடைபாதையில் உள்ள பழக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வெங்கடேசன் மற்றும் 3 நபர்கள் அல்லியிடம் உனது கணவர் எங்கே? எனக்கு தர வேண்டிய பணத்தை கொடு எனக் கேட்டு, அல்லியிடம் தகராறு செய்து, தாங்கள் வைத்திருந்த கத்தியால் அல்லியை தாக்க முற்பட்டபோது, அல்லி சற்று ஒதுங்கிடவே, காயம் ஏற்படவில்லை. உடனே 4 நபர்களும் கடையிலிருந்த பொருட்களை உடைத்து, அல்லி வைத்திருந்த பணம் ரூ.1,000/-ஐ பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து அல்லி, R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்து எதிரிகள் 1.வெங்கடேசன், வ/35, த/பெ.மோகன், பள்ளிக்கரணை, 2.சீனிவாசன், வ/38, த/பெ.ஏழுமலை, மேற்கு மாம்பலம், 3.வினோத், வ/31, த/பெ.கிருஷ்ணா ரெட்டி, மேற்கு மாம்பலம், 4.மணிவண்ன் (எ) செந்தில், வ/42, த/பெ.லோகநாதன், மேற்கு மாம்பலம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். எதிரிகளிடமிருந்து பணம் ரூ.1,000/-, 1 ஆட்டோ மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
R-4 செளந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் N.கண்ணன் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடிவடைந்து மேற்படி வழக்கில் எதிரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 1.வெங்கடேசன், 2.சீனிவாசன், 3.வினோத், 4.மணிவண்ணன் (எ) செந்தில், ஆகிய 4 எதிரிகளுக்கு தலா 04 வருடங்கள் சிறை தண்டனை விதித்து 14.03.2025 அன்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, இறுதி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆஜர் செய்து, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த, தற்போது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வரும் உதவி ஆணையாளர் N.கண்ணன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., இன்று (17.03.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
The post சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர சீரிய பணியாற்றிய உதவி ஆணையாளரை நேரில் அழைத்து பாராட்டு! appeared first on Dinakaran.