ரஷியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிய வடகொரியா

7 hours ago 1

பியாங்க்யாங்,

ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அவற்றின் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவியால் போரில் உக்ரைன் தொடர்ந்து தாக்குப்பிடித்து நிற்கிறது. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக செயல்படுகிறது.

அதன் ஒருபகுதியாக வடகொரியா சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது. அவர்கள் உக்ரைன் எல்லை அருகே உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டனர்.

ஆனால் கடுமையான பனி மற்றும் உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்களில் பலர் பலியாகினர். இந்தநிலையில் ரஷியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி இருப்பதாக தென்கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Entire Article