
புதுடெல்லி,
தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
அறிவியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு, குறிப்பாக நமது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள். அறிவியல் மற்றும் புதுமைகளை தொடர்ந்து பிரபலப்படுத்துவோம், மேலும் ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்க அறிவியலைப் பயன்படுத்துவோம்.
இந்த மாத மன்கிபாத் நிகழ்ச்சியில், இளைஞர்கள் ஏதேனும் ஒரு அறிவியல் செயல்பாட்டில் பங்கேற்கும் 'ஒரு விஞ்ஞானியாக ஒரு நாள்' பற்றிப் பேசினோம் என தெரிவித்துள்ளார்.