
வாஷிங்டன்,
ரஷியா -உக்ரைன் இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுடனும் தீவிர பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தநிலையில் துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து டிரம் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகனுடன் பல விஷயங்கள் குறித்து தொலைபேசியில் பேசினேன். இருவரும் சிறப்பான பேச்சுவார்த்தை நடத்தினோம். நான் முதல்முறையாக ஜனாதிபதியாக இருந்தபோது துருக்கி உடன் சிறப்பான உறவு இருந்தது. பல விஷயங்களில் நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றி உள்ளோம். துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். சிரியா மற்றும் காசா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் பேசினோம் என அதில் பதிவிட்டுள்ளார்.