இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்

3 hours ago 1

கொழும்பு,

இலங்கையில் கடைசியாக 2018-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அந்தவகையில் கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் அரசியல், பொருளாதார நெருக்கடியால் அப்போது தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 2023-ம் ஆண்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 2 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 75 ஆயிரம் பேர் போட்டியிட்டனர். இதற்காக 13 ஆயிரத்து 759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு சென்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

அதிபர் திசநாயகா தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இந்த தேர்தல் பரீட்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article