ரஷிய அதிபர் புதினை கொல்ல சதியா? கார் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி

2 days ago 4

மாஸ்கோ,

ரஷிய அதிபராக இருக்கும் புதின், அமெரிக்காவிற்கு அடுத்து உலகில் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது உயிருக்குப் பல அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவரை பாதுகாக்க ரஷிய சீக்ரெட் சர்வீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர் ஒரு இடத்தற்குச் செல்வதற்குப் பல வாரங்களுக்கு முன்பே கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிடும் அந்த அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில், புதினின் பாதுகாப்பு கான்வாயில் இடம்பெற்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஷியாவை சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மாஸ்கோ சாலையில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கார் ரஷிய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது.

இந்த கார் ரஷிய அதிபர் மாளிகையின் அதிபர் சொத்து மேலாண்மைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென கான்வாய் கார் வெடித்துச் சிதற என்ன காரணம் கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கார் வெடித்த சம்பவம் ரஷிய அதிபர் புதினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஷிய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஷிய அதிபர் புதினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article