ராம ரத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டில் விளக்கம்

1 day ago 2

சென்னை,

ராம நவமி தினத்தையொட்டி வரும் ஏப்ரல் 6-ம் தேதி சேலம் அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதொடர்பான அந்த மனுவில், ராம ரத யாத்திரை சிறப்பு பூஜைகளுடன் சேலம் அயோத்தியாபட்டினம் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சின்னக்கடை, பெரியக் கடை வீதி வழியாக செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைகிறது. இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபி, சேலம் அம்மாப்பேட்டை உதவி ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி அனுமதி மறுத்து உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, போலீசார் அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Read Entire Article