
டெல்லி,
5 நாட்கள் அரசு முறை பயணமாக சிலி நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பிரண்ட் இந்தியா வந்துள்ளார். அவர் இன்று ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடி, கேப்ரியல் போரிக் பிரண்ட் இடையேயான இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பு பலன்பெரும் வகையில் பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுளது. லத்தீன் அமெரிக்காவின் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக சிலி விளங்குகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ரெயில்வே, விண்வெளி மற்ற துறைகளில் சிலியுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.