பணியிடங்கள் விவரம்:
1. Junior Manager (Finance): 3 இடங்கள். வயது: 18லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Executives: i) Civil: 36 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் (டிரான்ஸ்போர்ட்டேஷன்/கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி/பப்ளிக் ஹெல்த்/ வாட்டர் ரிசோர்ஸ்) பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Electrical: 64 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/பவர் சப்ளை/ இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல்/இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்/டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.30,000-1,20,000.
3. Multi Tasking Staff: 464 இடங்கள்.
வயது: 18 லிருந்து 33க்குள். சம்பளம்: ரூ.16,000-45,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். முதற்கட்ட தேர்வு ஏப்ரலிலும், 2ம் கட்ட தேர்வு ஆகஸ்டிலும் நடைபெறும். உடற்தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகள் அக்டோபரில் நடைபெறும்.
கட்டணம்: பணி எண் 1 மற்றும் 2க்கு ரூ.1000/-. பணி எண்: 3க்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. https://dfccil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2025.
The post ரயில்வேயில் 642 பல்நோக்கு பணியாளர் மற்றும் எக்சிக்யூட்டிவ்ஸ் appeared first on Dinakaran.