தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரலில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்று, ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே கண்டன கூட்டம் நடத்தினர். கோட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் குமரவேல் வரவேற்றார். சங்க பொது செயலாளர் சூரிய பிரகாசம், ஐ.சி.எப்.எம்.எஸ். பொதுச் செயலாளர் குருநாதன், எஸ்.ஆர்.இ.எஸ் நிர்வாக பொது செயலாளர் சூரிய பிரகாஷ், ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், தேர்தல் விதிமுறையை அமல்படுத்தி நியாயமான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும், புதிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8வது ஊதிய உயர்வு குழுவை அமைத்திடவும், அதுவரை குறைந்தபட்ச ஊதியம் 32,500 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இறுதியில் நிர்வாக பொது செயலாளர் சந்திரசேகரன், பார்த்திபன், நன்றி உரையாற்றினார். இதில், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
The post ரயில்வே பொது மேலாளரிடம் தொழிற்சங்கம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.