டெல்லி: ரயில்வே லெவல் கிராஸிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது. செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தை அடுத்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே லெவல் கிராஸிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டார். அனைத்து ரயில்வே கேட்களிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். லெவல் கிராஸிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இண்டர்லாக்கிங், கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம். இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் குரல் பதிவு சாதனம் இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரயில் வாகனப் பிரிவு 10,000க்கு மேல் உள்ள ரயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர் லாக் அமைக்கப்பட்டுள்ளது. கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் பொருத்த வேண்டும். அனைத்து ரயில்வே கேட் அருகிலும் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
The post ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்: லெவல் கிராஸிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது ரயில்வேதுறை appeared first on Dinakaran.