திருமலை: ரயில்வே பிரிவில் பயணிகளுக்கு வழங்கும் ரூ.92 லட்சம் போர்வைகள் மாயமானது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தென் மத்திய ரயில்வே கோட்டம் சார்பில், ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.360 மதிப்புள்ள இந்த போர்வைகள் ஹரியானாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்து பயணிகளுக்கு விநியோகம் செய்கிறது. இந்த போர்வைகள் பராமரிப்பு பணிகளை 170 ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விஜயவாடா பிரிவில் கடந்தாண்டு ரூ.92 லட்சம் மதிப்புள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்வைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.
இந்த பிரச்னையால் நாடு முழுவதும் போர்வைகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. ‘’காணாமல்போன போர்வைகள் ரயில்வே சொத்து என்றும் இழப்புத் தொகை ஒப்பந்ததாரரின் நிலுவைத் தொகையில் இருந்து வசூலிக்கப்படும். இதுபோன்று ஏற்படுவதை தடுக்க உள் மதிப்பாய்வு நடந்து வருகிறது. மேலும் விசாரணையும் நடந்து வருகிறது’’ என ரயில்வே மூத்த பிரிவு பொறியாளர் எம்.லோவா பிரசாத் தெரிவித்தார்.
The post ரயில் ஏசி பெட்டியில் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.92 லட்சம் போர்வை மாயம் appeared first on Dinakaran.