பாலக்காடு, ஏப். 11: ரயில்வே பெண் அதிகாரியை தாக்கி விட்டு தப்பியோடிய பயணியை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நிலம்பூரிலிருந்து கோட்டயத்திற்கு செல்லும் பாசன்ஜர் ரயிலில் கடந்த மார்ச் 30 ம் தேதி பயணி ஒருவர் டிக்கெட்டு எடுக்காமல் பயணித்துள்ளார். அவரிடம் பெண் டி.டி.இ அதிகாரி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் அபராதம் கட்டணம் கட்டுமாறு கூறியுள்ளார்.
அதற்கு பயணி, அந்த பெண் அதிகாரியை அடித்து காயப்படுத்தி, தரக்குறைவாக பேசியுள்ளார். அதிகாரியின் போனை பிடுங்கி சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பெண் அதிகாரியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்டம் ஹரிப்பாட்டை அடுத்த பள்ளிப்பாடை சேர்ந்த கோபகுமார் (45) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post ரயிலில் பெண் அதிகாரியை தாக்கிய பயணி கைது appeared first on Dinakaran.