நம் சகோதரிகளின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

3 hours ago 2

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி
உரையாற்றி வருகிறார். அதில்; “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தீவிரவாதிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பஹவல்பூர், முர்டிகேவில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் உலகளவிலான தீவிரவாதத்துக்கு பல்கலை.யாக செயல்பட்டன. இந்தியாவின் தாக்குதல் தீவிரவாத முகாம்களை மட்டுமல்ல, தீவிரவாதிகளின் நம்பிக்கையையும் தகர்த்துள்ளது. நம் சகோதரிகளின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி வந்த தீவிரவாதிகளை ஒரே தாக்குதலில் இந்தியா கொன்றுள்ளது. இந்தியாவின் அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு அளிக்காமல் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டது. பள்ளிகள், வீடுகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் டிரோன்களும் ஏவுகணைகளும் இந்தியாவின் தாக்குதலில் வீழ்ந்ததை உலகமே வியந்து பார்த்தது. சாமானிய இந்தியர்களை குறிவைத்து பாக். தாக்குதல் நடத்தியது” என பிரதமர் உரையாற்றி வருகிறார்.

The post நம் சகோதரிகளின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article