டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி
உரையாற்றி வருகிறார். அதில்; “தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பதிலாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டது பாகிஸ்தான். இந்தியாவின் கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போனது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இருக்கும். தாக்குதலுக்கு இந்தியாவின் முப்படைகள் எப்போதும் தயாராகவே இருக்கும். அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது.பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் செயல்படும் தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் பிரித்துப் பார்க்க மாட்டோம். பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலக அரங்குக்கு நாம் தெரியப்படுத்தினோம். இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி மரியாதை நிகழ்வில் பாக். ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஒவ்வொருமுறையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை புதிய மைல்கல். தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் செயல்பட்டால் ஒருநாள் அந்நாடு அழியும்” என பிரதமர் உரையாற்றி வருகிறார்.
The post அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.