ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்ட வழக்கு: இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

3 hours ago 2

ஜோலார்பேட்டை: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியது: கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் திருப்பூரைச் சேர்ந்த 28 வயதுள்ள கர்ப்பிணி பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியாக பயணம் செய்தார். நள்ளிரவு 12.10 மணிக்கு வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே விரைவு ரயில் வந்தபோது கர்ப்பிணி பெண் ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது அங்கிருந்த கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

Read Entire Article