சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை (பிப்.28) போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார்.
“போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர்.